சொத்துக்குவிப்பு வழக்கில் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட்..
Aug 03, 2022
2510
சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. சவுதாலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.சவுதாலாவுக்கு 88 வயது ஆவதை கருத்தில் கொண்டும், ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளதை கவனத்தில் கொண்டும் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
கல்விக்கு முதுமை தடையல்ல! 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றார் 87 வயதான அரியானா முன்னாள் முதலமைச்சர்
May 11, 2022
3108
அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 87வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.சண்டிகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியானா மாநில கல்வி அதிகாரிகள் அவரிடம் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் சவுதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம் அரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12ம் வகுப்பு தேர்வையும் எழுதினார். ஆனால், 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்தாண்டு 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதிய அவர் நூற்றுக்கு 88 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News